13திருமண புரிந்த நாள்
எம்பெருமாள் பூமிப்பிராட்டியை ஐப்பசி மாதத்துத் திருவோணத்தன்று மணந்து கொண்டார். ஆண்டுதோறும் ஐப்பசித்
திருவோணத்தில் திருக்கல்யாண உத்ஸவம் தொடங்கித் தற்கால முறைக்கு ஏற்ப்ப பல்வகை இசை நிகழ்ச்சிகள் 12 நாள் வருகிறது.
14ஆலயத்தின் விசேஷ அம்சம் ,
உப்பு இல்லமல் பகவானுக்கு ஸ்கல நைவேத்தியங்களும் செய்யப்படுகின்றன. உப்பயோ அது கலந்த பொருளையோ கருடன் ஸந்நிதிக்கு அப்புறம் ஒருவரும் கொண்டுபோவதில்லை. அதனாலேயே இவ்வெம்பெருமானுக்கு லவணவர்ஜித் (உப்பை விலக்கிய) ஸ்ரீனிவாஸன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த ஸந்நிதியில் தனியாகத் தாயார் ஸந்நிதி கிடையாது. பெருமாளுக்கு பக்கத்தில் பூமிநாட்ச்சியார் மட்டும் உண்டு. பூமிநாட்ச்சியாரை பிரிந்து பெருமாள் மட்டும் தனியாக எழுந்தருள்கின்ற வழக்க இல்லை
|