22.ஸ்ரீராம நவமி
இத்திருக்கோயிலில் பங்குனி ப்ரமோற்சவத்தையடுத்து ஸ்ரீராமநவமி உத்ஸவம் பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. அந்நாட்களில் ஸ்ரீராமன், சீதை, இலக்குவன், ஹனுமான் ஆகியியோருக்குத் திருமஞ்சனம் விசேஷ பூஜைகளும் நடைபெறும். அவ்வுற்சவத்தின் இறுதி மூன்று நாட்களில் முறையே மாப்பிள்ளை அழைப்பு, சீதா கல்யாணம், மற்றும் ஸ்ரீராமர் கனகாபிஷேகம், பட்டாபிஷேகம் வெகு விமசரிசையை நடைபெறும்.
|