தஷிண கோதாவரி தஷிண கங்கைக்கு தென்புறத்தில் தஷிணகோதாவரி நதி செல்கின்றது. (இது கீர்த்திமானாறு என வழங்கும்) இதில் நீராடுபவர்கள் எல்லாப் பாவங்களும் நீங்கப்பெறுவர்.
தஷிணயமுனை
மேற்கூறிய ஆற்றுக்குத் தென்புறத்தில் மற்றொரு புண்ணிய நதி ஒடுகின்றது. இதற்கு "தஷிணயமுனை" என்று பெயர். (இப்பொழுது "அரிசொல்லறு" என வழங்குகின்றது.) இதில் நீராடுபவர் மிக்க புண்ணியத்தைப் பெறுவர். இவ்வாறு வடநாட்டில் ஒடிக்கொண்டிருந்த கங்கை, கோதாவரி, யமுனை ஆகிய முன்று புண்ணிய நதிகளும் மார்க்கண்டேய ஷேத்திரத்தில் வந்து கூடித் திறுவிண்ணகரப்பனது கைங்கர்யத்திற்குப் பயன்பட்டுச் சிறப்புறுகின்றன
|