சன்னதியில் நடக்கும் உத்ஸவங்க்ளின் கால விளக்கம்
வைகாசி - மாதம்
திருவோணம் – வஸந்த உத்ஸவம் சாத்துமுறை சேஷவாகனம் (முந்திய அனுஷம் தொடங்கி 6-நாள் உத்சவம் - திருநைந்தவனம் வஸந்த மண்டபத்தில்)
ஆடி - மாதம்
ஜோஷ்டாபிஷேகம் (4 நாள்) மூல்வர், உத்ஸவர் கவசம் களைந்து திருமன்சனம், 4-ம் திருநாள் மாலை தொட்டித் திருமஞ்சனம்.
ஆவணி - மாதம்
திருவோணம் - பவித்ர அதஸ்வ சாத்துறை ஷீர்யோதய கருடசேவை - (முந்திய கேட்டை தொடங்கி 5-நாள் உத்ஸவம்)
உத்ஸவம்
புரட்டசி - மாதம்
திருவோணம் - ப்ரஹ்மோத்ஸவம் சாத்துமுறை கோரதம் (முந்திய சித்திரை நட்சத்திரம் தொடங்கி 9-நால் உத்ஸவம்ஸ்ரீ தேசிகள் அவதார உத்ஸவம்)
ஐப்பசி - மாதம்
திருவோணம் - திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம் (பின் 12-நாள் உத்ஸவம்)
மார்கழி - மாதம்
பகல் பத்து 10-நாள், இராப்பத்து 10-நாள் இயற்பாசாத்துமுறை, 1-நாள் ஸ்ரீ தேசிகப் பிர
பந்தம் சாத்துமுறை 1-நால் (மொத்தம் 22 - நாள்)
தை - மாதம்
திருவோணம் தெப்ப உத்ஸவம் சாத்துமுறை - (முந்திய கேட்டை தொடங்கி 5-நாள் உத்ஸவம்)
பங்குனி - மாதம்
திருவோணம் - ப்ரஹ்மோத்ஸவம் சாத்துமுறை (அவதர மஹோத்ஸவம்) திருத்தேர். (முந்திய சித்திரை தொடங்கி 9-நால் உத்ஸவம்)
மற்ற மாதத்திருவோணங்களிலும், மிகம்பல பக்தகோடிகள் வந்து புஷ்கரிணியில் நீரடிப் பெருமாளைத் தரிசித்து
அவதார நஷைத்ர உத்ஸவைத்தை ஸேவித்துச் செல்கின்றனர். ஒவ்வொரு திருவோணத் தினத்தன்று, பகல் 11.00 மணிக்கு, எம்பெருமானுக்கு தீப வழிபாடு சிறப்புடன் நடக்கும். தீபம் எடுப்பவர்கள் உப்பிலியப்பன் அருள்வாக்கு சொல்வது வழக்கம். ஒவ்வொரு மாதத்துத் திருவோணமும் இத்தலத்து எம்பெருமானுக்கு மிக விசேஷ தினமாகும்
1. பிரார்தனைத் தங்கரத உலா
தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக வைனவத் தலமொன்றில் தங்கரதம் அமைக்கப்ப்ட்டுள்ளது. இத்தலதில் மட்டுமே, பக்தர்கள் பிராரித்தனைகாகப் பெருமாளையும் பூமிதேவியையும் தங்கரததில் எழுந்தருள்ச் செய்து வெளிப்பிராகாரத்தில் உலா வருவது கண்கொள்ளாக்காட்சியாகும்.

பிரார்தனைத் தூலாபாரம்
தமிழக வைணவத் தலங்களில் முதலாவதாகத் துலாபாரம் நிறுவப்பட்டது. இத்தலத்திதான் அன்பர்கள் தமது எடைக்குச் சமமாய்த் தம்மால் இயன்றதைத் தந்திடும் வகையில் உப்பு தவிர அனைத்துப்பொருட்களும் காணிக்கையாக்ப் பெறப்படுகின்றன. திருக்கோயிலிலேயே நட்பு சந்தை விலைக்குப் பொருட்களைப் பெற்றுப் கொள்ளலாம்.
நித்யராதனைக் கட்டளை முதலீடு
பரம்பரையாக ஆண்டிற்கு ஒரு நாள் விரும்பும் நாளில் (பிறந்த நாள், திருமண நாள் மற்ரும் இதர விஷேச நாட்கள்) பெருமாளுக்கு ஆறுகால பூஜைகல் செயிய முதலீடாக ரூ.1000/- செலுத்தி பெருமாளிடம் அருளைப் பெறலாம்.
|